Published : 12 Feb 2016 08:18 AM
Last Updated : 12 Feb 2016 08:18 AM

ஏப்ரலில் தனித் தேர்வர்களுக்கு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இதற்கு பிப்ரவரி 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர் களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 01.04.2016 அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் பிப்ரவரி 18 முதல் 29-ம் தேதி வரை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் ( www.tndge.in) விண்ணப் பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.50-ஐ தனித் தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடி யாக செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் ஆன் லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல் லது பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ரூ.40-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுயமுக வரியிட்ட உறையையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x