வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: தமிழகம் முழுவதும் 4.18 லட்சம் பேர் மனு - தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: தமிழகம் முழுவதும் 4.18 லட்சம் பேர் மனு - தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் 4.18 லட்சம் பேர் மனு செய்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக் கப்பட உள்ளது. இதையடுத்து, ஆயத்தப் பணிகளில் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கடந்த 31-ம் தேதி நடத்தப்பட்ட வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்காக 4 லட் சத்து 18 ஆயிரத்து 572 மனுக் கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்ப்பதற்காக 3 லட்சத்து 32 ஆயிரத்து 159 மனுக்களும், நீக்குவதற்காக 16,430 மனுக் களும், திருத்தம் தொடர்பாக 46,531 மனுக்களும் வந்துள்ளன. இந்த மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

வரும் 6-ம் தேதி இரண்டாம்கட்ட முகாம் நடக்கிறது. இந்த இரண்டு முகாம்களிலும் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு நடத்தப்படும். அதன் பிறகு, துணை வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களுக்கு மார்ச் இறுதிக்குள் வாக்காளர் அடை யாள அட்டை வழங்கப்படும்.

போலி வாக்காளர்கள், இரட் டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றை நாங்களே கண்காணித்து பட்டிய லில் இருந்து நீக்கி வருகிறோம். போலி வாக்காளர் இருப்பது தெரிந்தால் எந்த தொகுதியில், எந்த பாகத்தில், எவ்வளவு பேர் என்பதை குறிப்பிட்டு சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 20 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். இவர்களது பெயர், புகைப்படம் ஆகியவை தமிழகம் முழுவதும் உள்ள பட்டியலில் ஒப்பிடப்பட்டு, கள ஆய்வுக்கு பிறகே சேர்க்கப்படும்.

புதிய தொழில்நுட்பம்

சட்டப்பேரவை பொதுத்தேர்த லின்போது புதிய தொழில்நுட்பம் சென்னையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தேர்தல் நடக்கும் நாளில் வாக்காளர்கள் தங்கள் கைபேசியில் ‘க்யூ’ என டைப் செய்து, இடைவெளி விட்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

குறிப்பிட்ட அந்த வாக்காளர் ஓட்டு போட வேண்டிய வாக்குச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர். இன்னும் எவ்வளவு நேரம் கழித்து வந்தால் ஓட்டுப்பதிவு செய்யலாம் என்ற தகவல் கிடைக்கும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

10-ல் ஆணையர்கள் வருகை?

தமிழகம், புதுச்சேரி, கேரளா வில் தேர்தல் தொடர்பாக ஆய்வு நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மற்றும் ஆணையர்கள் வர உள்ளனர். இவர்கள் பிப்ரவரி 10-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ‘‘ஆணையர்கள் வரும் தேதி அதிகாரப்பூர்வமாக இன்று (2-ம் தேதி) அறிவிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in