

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏ அர்ஜுனன் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது நகராட்சி ஆணையர் அலுவலகம் பூட்டி இருந்தது . இதையடுத்து அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன், திண்டிவனம் நகர அதிமுக செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடே சன், அர்பன் வங்கி தலைவர் சேகர்உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 30 நிமிட போராட்டத்திற்கு பின்பு அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வந்தார். அவரிடம், நகராட்சிக்கு சொந்தமான மயானத்தை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறுகுறைகளை சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் சுட்டிக்காட்டி னார். அப்போது நகராட்சி ஆணையருக்கும் சட்டமன்ற உறுப்பின ருக்கும் கருத்துவேறுபாடு அதிகமாகியது. பின்பு அதிமுகவினர் நகராட்சி ஆணையரை முற்றுகை யிட்டு கோஷம் எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. பிறகு பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக ளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று நகராட்சி ஆணையர் உத்தரவாதம் அளித்தார். இதனால்எம்எல்ஏ உள்ளிட்டோர் போராட் டத்தை கைவிட்டு வெளியேறினர்.
இதுகுறித்து எம்எல்ஏ அர்ஜூனனிடம் கேட்டபோது அவர் கூறியது:
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தன் சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை நகராட்சி மின் மயானத்தை சீரமைக்கவும், பாதைகள் மற்றும்பூங்காக்களை பராமரிக்கவும் அளித்தார். ஆனால் மின் மயானம் முறையாக பராமரிக்கப் படவில்லை. இதற்கிடையே தொண்டு நிறுவனம் ஒன்று தாங் கள் பராமரிப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்குநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளிக் கவில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணை யர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கேட்ட போது அவர் கூறுகையில், "எம்எல்ஏ சிபாரிசு செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு ஒப் படைக்கலாமா வேண்டாமா என ஆலோசனை செய்துதான் முடிவெடுக்கமுடியும். எம்எல்ஏ வரும்போது அவசர ஆய்வு ஒன்றுக்காக நான் வெளியே சென்றேன். சற்று நேரத்தில் திரும்பி விட்டேன்" என தெரிவித்தார்.