மின்சாரம் தாக்கியும் விபத்திலும் இறந்த 15 பேர் குடும்பங்களுக்கு ரூ.39 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மின்சாரம் தாக்கியும் விபத்திலும் இறந்த 15 பேர் குடும்பங்களுக்கு ரூ.39 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

மின்சாரம் தாக்கி இறந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட் சம், விபத்தில் இறந்த மூவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற் றும் பகிர்மானக் கழகத்தில் பணி யாற்றி வந்த தேனி நாராயண தேவன்பட்டியைச் சேர்ந்த ராஜாங் கம், திருப்பூர் மூலனூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, கோவை மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த அச்சுதா னந்தம் ஆகியோர் பணியில் இருக் கும்போது மின்சாரம் தாக்கி இறந்தனர்.

மேலும், புதுக்கோட்டை ஆவு டையார் கோயிலைச் சேர்ந்த ராமு, கன்னியாகுமரி வடசேரியைச் சேர்ந்த சுபாஷ், கடலூர் கொத்தட் டையைச் சேர்ந்த கணேசன், மு.பட்டியைச் சேர்ந்த செல்வி, விழுப்புரம் கக்கனூரைச் சேர்ந்த முருகதாஸ், திருவள்ளூர் பாட் டைக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர், வேலூர் குப்பத்தைச் சேர்ந்த பாரதி ஆகியோரும் மின்சாரம் தாக்கி இறந்தனர். இவ்வாறு மின்சாரம் தாக்கி இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் பாபு, திருவண்ணாமலை புதுப்பட்டுவைச் சேர்ந்த சிவலிங் கம் ஆகிய 3 பேரும் விபத்தில் இறந்தனர். இவர்கள் குடும்பங் களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மேலும், புதுக்கோட்டை காவல் கட்டுப்பாட்டறை, மாவட்ட குற்ற ஆவண கூடத்தில் உதவி ஆய்வாள ராக பணியாற்றிய வி.ராஜகோபா லன், மாரடைப்பால் இறந்தார். இவ ரது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in