

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந் தது. மாவட்டத் தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்களின் அனைத்து சங்க போராட்டக் குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத் தத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் நீடித் தது. மாநிலம் முழுவதும் பல இடங் களில் ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னை யில் சேப்பாக்கம் எழிலகம், நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குநரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம் குறித்து அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ரா.பாலசுப்பிர மணியன், சென்னையில் நிருபர் களிடம் நேற்று கூறியதாவது:
பிப்ரவரி 9-ம் தேதி இரவு தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு, எங்களது கோரிக்கை களை முதல்வரின் கவனத் துக்கு கொண்டு செல்வ தாகவும், நல்ல தீர்வு கிடைக் கும் என்றும் கூறினர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக 12-ம் தேதி (இன்று) தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங் களிலும் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாடு சுகாதாரத்துறை பணி யாளர்கள், செவிலியர்கள் சங்கத் தின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று காலை தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, சி.விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பழனிச்சாமி கூறும் போது, ‘‘எங்களது சங்கங்களின் 15 அம்ச கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின்போது வலி யுறுத்தினோம். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காலவரையற்ற வேலை நிறுத் தத்தைத் தொடர நாங்கள் தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.