டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்

மாறி மாறி குற்றம்சாட்டி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காமல் தாமதம்: மத்திய, மாநில அரசுகளுக்கு தினகரன் கண்டனம்

Published on

மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தாமதப்படுத்தி வருவதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தினகரன் இன்று (ஜூலை 01) தன் ட்விட்டர் பக்கத்தில், "மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி, ஆண்டுக்கணக்கில் ஆனபிறகும் அடிப்படையான பணிகளைக் கூட இன்னும் தொடங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இதன் பிறகும் இழுத்தடிக்காமல், திட்ட வரைவு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in