Published : 13 Dec 2015 01:13 PM
Last Updated : 13 Dec 2015 01:13 PM

மீட்பு பணியில் ஈடுபட்ட மாணவர் விஷப்பூச்சி கடித்து பலி

திருவொற்றியூரில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாணவர் விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியை சேர்ந் தவர் முகமது ஜாபர். இவரது மகன் இம்ரான்(16). வீட்டருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சென்னையில் கடந்த 1, 2-ம் தேதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரு வொற்றியூர் கார்கில் நகரும் ஒன்று. இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பலரை தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர்.

மீட்பு பணியின்போது வெள் ளத்தில் நடந்து சென்ற இம்ரானின் காலில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது. தனக்கு ஏற்பட்ட காயத்தை கண்டுகொள்ளாத இம்ரான் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இம்ரா னின் கால் வீக்கம் அடைந்து, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே வீட் டருகே உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற இம்ரான், பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவில் இம்ரான் பரிதாப மாக உயிரிழந்தார். அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வந்த பின்னரே, இம்ரானை பாம்பு கடித்து உடலில் விஷம் பரவி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவரும் என்று திருவொற்றியூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x