

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மருத்துவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக
உயிர் காக்கும் உன்னத சேவையே வாழ்நாள் கடமையென செயல்படும் மருத்துவர்கள் பணி மகத்தானது. கடினமான பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாமல் மக்கள் நலன்காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த 'தேசிய மருத்துவர்' தினத்தில் எனது வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக
மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள். கரோனா போன்ற பேரிடர் நேரங்களில் தன்னலம் பாராது களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள் என்றைக்கும் போற்றத்தக்கவர்கள்.
மருத்துவம் தொழில் அல்ல; சேவை என்பதை உணர்ந்து செயல்படும் மருத்துவர்கள் அனைவரையும் வணங்கி, வாழ்த்தி மகிழ்ந்திடுவோம்!