

தமிழக ஆளுநர்மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர் ஜெகநாதனைபல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். ஜெகநாதன்பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.
பேராசிரியர் ஜெகநாதன் 39 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் டீன் ஆகவும், வேளாண் வானிலை துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக கல்விக்குழு தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் 55 ஆய்வுக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். அதோடு, சர்வதேச கருத்தரங்குகளில் 14 ஆய்வுக்கட்டுரைகளையும், தேசிய கருத்தரங்குகளில் 7 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்து இருக்கிறார். ரூ.7.64 கோடி மதிப்புள்ள 8 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்திய அனுபவம் மிக்கவர்.