

ஈஷா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈஷா சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் சேற்றுப் புண் போன்ற மழைக்கால பாதிப்புகளுக்கு மருந் துகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக, டெங்கு மற்றும் சிக்குன் குன்யா போன்ற வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்கள் வேகமாக குணமடைய நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 10 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.