Published : 14 Dec 2015 09:21 AM
Last Updated : 14 Dec 2015 09:21 AM

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு: சென்னை 29, திருவள்ளூர் 5 பள்ளிகள் மட்டும் விடுமுறை - காஞ்சிபுரம் இளையனார்வேலூர் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக நீண்ட விடு முறைக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப் படுகின்றன. சென்னையில் 29 பள்ளிகளுக்கும் திருவள்ளூரில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று (14-ம் தேதி) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 14-ம் தேதி (இன்று) முதல் வழக் கம்போல் செயல்படும். கீழ்க் காணும் பள்ளிகளுக்கு மட்டும், ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக் கப்படுகிறது. அதன்பிறகு சம்பந்தப் பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள்.

1. அரசு மேல்நிலைப் பள்ளி, சிட்கோ நகர், வில்லிவாக்கம்

2. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை

3. ஒய்எம்சிஏ காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, நந்தனம்

4. அம்பத்தூர் அரிமா சங்கம் நடுநிலைப் பள்ளி, சாலிகிராமம்

5. லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளி, கிண்டி

6. திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை

7. புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம்விளக்கு

8. சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி, ஆயிரம்விளக்கு

9. சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை

10. புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி, சின்னமலை

11. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந் தோப்பு

12. மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு

13. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி - மாடல் பள்ளி, ஆயிரம்விளக்கு

14. மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை

15. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை

16. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை

17. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிஐடி நகர், நந்தனம்

18. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சிஐடி நகர், நந்தனம்

19. மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை

20. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, திடீர் நகர், சைதாப்பேட்டை

21. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, புலியூர், வடபழனி

22. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, புலியூர், வடபழனி

23. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்

24. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஈக்காட்டுத்தாங்கல்

25. மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை

26. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, காமராஜர் அவென்யு, அடையாறு

27. மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, காமராஜர் அவென்யு, அடையாறு

28. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, தரமணி

29. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, கோட்டூர்புரம்

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் ஒருசில தனியார் பள்ளிகளும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, நவ. 8-ம் தேதி முதல் நேற்று வரை, இடையில் ஒருசில தினங்கள் தவிர, ஏறக்குறைய சுமார் ஒரு மாத காலத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ‘தற்போது அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக’ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ஏற்பாடு

வெங்கடச்சேரி, செய்யாறு ஆற்று பாலம் சேதமடைந்திருப் பதால், உத்திரமேரூர் அடுத்த இளையனார்வேலூர் பகுதியைச் சேர்ந்த 190 மாணவர்கள், நெய் யாடுவாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் வரை, இளையனார் வேலூர் பகுதியில் சத்திரம் ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. பராமரிப்பு மற்றும் வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் 5 அரசு பள்ளி களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளி, போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பூதப்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது. மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் வழக்கம்போல் செயல்பட தொடங்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x