Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக 1,896 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. மாநகராட்சியின் செலவீனத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,896 பதவிகளில் 1,150 பதவிகள் அவசியம் இல்லாததாக கருதி கடந்த 2012-ம் ஆண்டு 746 தற்காலிக பதவிகளாக குறைக்கப்பட்டது.
இப்பதவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் பெருகி வரும் நிலையில், இப்பதவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு மாநகராட்சி சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதேபோன்று சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட 4 துணை ஆணையர் பதவிகள் மற்றும் அதனை சார்ந்த 4 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT