

விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு தினேஷ் (5), சத்ய (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தில் சங்கரியின் தாய் பெரியநாயகம் அண்மையில் இறந்தார். அவருக்கு கரும காரியம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்ள கணவன், மனைவி இருவரும் தங்களின் இரு குழந்தைகளுடன் ஆசூர் கிராமத்திற்கு வந்திருந்தனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் தினேஷ், சத்யஸ்ரீ இருவரையும் அந்தப் பகுதியில் இருந்த சிறார்கள் பெற்றோருக்குத் தெரியாமல் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க அழைத்துச் சென்றனர்.
கிணற்றில் விழுந்த தினேஷ், சத்யஸ்ரீ இருவரும் நீச்சல்தெரியாமல் தண்ணீரில் மூழ்கினர். உடன் வந்திருந்த குழந்தைகள் அருகிலிருந்த இளைஞர்களை உதவிக்கு அழைத்தனர்.
அங்கிருந்தவர்கள் இருவரை யும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே குழந் தைகள் இருவரும் இறந்து விட்டதாக கூறினர்.