Published : 04 Mar 2014 12:47 PM
Last Updated : 04 Mar 2014 12:47 PM

திமுக தொகுதிப் பங்கீடு: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கீடு

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து காதர் மொய்தீன் கூறுகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திருநெல்வேலி, வேலூர், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய ஊர்களில் ஏதேனும் 2 தொகுதிகளில் சீட் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது, ஆனால் திமுக 1 தொகுதி ஒதுக்கியுள்ளது என்றார்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏணி சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் ஒதுக்கப்பட்ட தொகுதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x