

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் சுதா சேஷய்யன், பதிவாளர் அஸ்வத்நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஜிகா, சிக்குன்குனியா, எச்ஐவி, எய்ட்ஸ், டெங்கு உள்ளிட்ட வைரஸ்களை ஆய்வுசெய்ய தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் உள்ளது. கரோனா வைரஸை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் ஆய்வகமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, டெல்டா பிளஸ்கரோனா வைரஸ் ஆய்வகத்தையும் இங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பன்னோக்கு மருத்துவமனை
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் புதிய அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
நீட் தேர்வு பாதிப்புகளை ஆராயதமிழக அரசு அமைத்துள்ள குழுவிடம்இதுவரை 86,342 பேர் கருத்துகளைதெரிவித்துள்ளனர். குழு அறிக்கைவிரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழகபாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இக்குழுவை எதிர்த்து அரசியல்நோக்குடன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீட் விவகாரத்தில் சட்ட ரீதியாகஅரசுக்கு உறுதுணையாக இருப்போம்என பேரவையில் பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.ஆனால், அக்கட்சியில் ஒருவரேகுழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது அக்கட்சியின் இரட்டை நடவடிக்கையை காட்டுகிறது. அக்கட்சியினர் தமிழக மக்களை எந்த அளவுக்கு நேசிக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது
இவ்வாறு அவர் கூறினார்.