முன்னாள் அமைச்சருக்கு கரோனா தொற்று

முன்னாள் அமைச்சருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுகச் செயலருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எனது இல்லத்தில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

அடுத்த 15 நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் உறவினர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் யாரும் உட்கட்சி குழப்பம் விளைவிக்க முடியாது. என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை கட்சியினர் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in