

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில், சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கடந்த 16-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் நேற்று நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவை வரவேற்கும் விதமாக ஏராளமான பெண்கள் பள்ளிக்கு வெளியே குவிந்து நின்று, அவரை வணங்கினர்.