Published : 30 Jun 2021 03:14 AM
Last Updated : 30 Jun 2021 03:14 AM

அணுசக்தி துறையின் தேர்வு மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

மத்திய அரசின் தேர்வுகளில் தொடர்ந்து தமிழகம் புறக்கணிக் கப்படுவதால், அணுசக்தி துறையின் தேர்வு மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டு மென மத்திய அரசின் அணுசக்தி துறை தலைவர் தினேஷ் வஸ்தவாவுக்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் எம்.பி. குறிப் பிட்டுள்ளதாவது:

அணுசக்தி துறையின் அணு எரிபொருள் வளாகம் (Nuclear fuel complex) ஜூன் 21-ல் வெளியிட்டுள்ள அறிவிக்கை Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வு ஜூலை 7-ம் தேதி நடை பெற உள்ளது.

இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 6 மையங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மையம்கூட தமிழகத்தில் இல்லை.

தமிழகம், புதுச்சேரி தேர்வர் கள் பெங்களூருவில் உள்ள மையத்தில் தேர்வெழுத வேண் டும்.

கோவிட் வழிகாட்டுதலில் தனித்திருக்கச் சொல்லும் மத்திய அரசு, மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் அலைக்கழிப்பது சரியா?

கோவிட் 2-வது அலை முடியவில்லை, டெல்டா பிளஸ் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜுன் 28-ம் தேதி கர் நாடகா முழுவதும் 2,576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் பெங் களூருவில் 20 சதவீத பாதிப்பு என்றபோது தேர்வர்கள் எப்படி நோய் தொற்று அச்சமின்றி தேர் வெழுதுவர்.

மத்திய அரசின் தேர்வுகளில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தி துறை தமிழ கத்திலும் ஒரு தேர்வு மையத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x