மதுரையில் ஜெயலலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலை கல்வெட்டு அகற்றம்: செல்லூர் ராஜூ மீது அதிமுக முன்னாள் எம்எல்ஏ புகார்

எம்ஜிஆர் சிலையில் இருந்த பழைய கல்வெட்டு அகற்றப்பட்டு செல்லூர் ராஜூ பெயருடன் வைக்கப்பட்டுள்ள புதிய கல்வெட்டு. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
எம்ஜிஆர் சிலையில் இருந்த பழைய கல்வெட்டு அகற்றப்பட்டு செல்லூர் ராஜூ பெயருடன் வைக்கப்பட்டுள்ள புதிய கல்வெட்டு. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது பெயரை இடம் பெறச் செய்வதற்காக மதுரை கே.கே.நகர் எம்ஜிஆர் சிலை வளாகத்தில் இருந்த கல்வெட்டை அகற்றி புதிய கல்வெட்டை நிறுவியுள்ளார் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம் கட்சித் தலைமைக்கு புகார் அனுப் பியுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே கே.கே.நகர் ரவுண் டானாவில் 2000-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் எம்ஜி ஆரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டு அதிமுகவினரால் பராமரிக்கப்படுகிறது. அதே இடத் தில் 2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலையும் திறக் கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென சிலை நிறுவிய பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்த கல்வெட்டு மாற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதா பெயருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பெயரும் சேர்க்கப்பட்ட புதிய கல்வெட்டு பதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து முன்னாள் எம்எல்ஏ வி.ஆர்.ராஜாங்கம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, ‘‘கே.கே.நகர் ரவுண்டானாவில் எம்ஜிஆர் சிலை நிறுவும்போது நான் மாவட்டச் செயலாளராக இருந்தேன். அந்தச் சிலையை திறந்த ஜெயலலிதாவின் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்று என்னுடைய பெயரை கல்வெட்டில் இடம்பெறச் செய்யவில்லை. ஜெயலலிதாவின் பெயரோடு மட்டுமே கல்வெட்டு நிறுவப்பட்டது.

ஆனால், செல்லூர் கே.ராஜூ தனது பெயரை அந்த கல்வெட்டில் இடம்பெறச் செய்வதற்காக ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட, அவரது பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்த பழைய கல்வெட்டை நடைமுறையை மீறி இரவோடு இரவாக அகற்றி புதிய கல்வெட்டு நிறுவியுள்ளார். இது குறித்து கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:

நான் அந்த கல்வெட்டை அகற்றச் சொல்லவில்லை. அது பழைய கல்வெட்டு. ராஜாங்கம் பெயர்கூட அதில் இல்லை. அந்தக் கல்வெட்டை அதே இடத்தில் வைக்கத்தான் நான் சொன்னேன். அதை வைக்காமல் விட்டுவிட்டார்கள். நான் மீண்டும் அந்த கல்வெட்டை அதே இடத்தில் வைக்கச் சொல்லிவிட்டேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in