வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி வரலாற்றை விளக்கும் கண்காட்சி

வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சியை ஓவியங்கள் மூலம் விளக்கும் வகையில், நடைபெற உள்ள கண்காட்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சியை ஓவியங்கள் மூலம் விளக்கும் வகையில், நடைபெற உள்ள கண்காட்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி குறித்த கண்காட்சி 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை நடைபெற்ற சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் விதையாக கருதப்படுகிறது. வரும் ஜூலை 10-ம் தேதி சிப்பாய் புரட்சியின் 215-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அப்போது, சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

இதற்கிடையில், வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் 215-வது சிப்பாய் புரட்சியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஜூலை 1-ம் தேதி) தொடங்கி 11-ம் தேதி முடிய மொத்தம் 11 நாட்களுக்கு சிறப்பு கண்காட்சி நடத்த உள்ளனர். இதற்காக, கோவையைச் சேர்ந்த ஓவியர் ரவிராஜ் என்பவர் சிப்பாய் புரட்சியின் வரலாற்றை விளக்கும் கருத்து ஓவியங்களை வரைந்துள்ளார். இதில், சிப்பாய் புரட்சிக்கான காரணம், அது நடந்த விதம்,முறியடிக்கப்பட்ட விதம் தொடர்பான 10 முக்கிய ஓவியங்களை டிஜிட்டல் பதிவாக மாற்றி கண்காட்சியில் பேனர்களாக வைக்கவுள்ளனர்.

இதுகுறித்து, வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறும்போது, ‘‘சிப்பாய் புரட்சியின் வரலாற்றை பொது மக்களுக்கு எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்தும், கலை நயத்துடன் வரையப்பட் டுள்ள இந்த ஓவியங்களை பார்க்கும்போதே தெரிந்துகொள்ள முடியும். அரசு அருங்காட்சியகத் தில் 11 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக இந்த டிஜிட்டல்பதிவு ஓவியங்கள் காட்சிப்படுத் தப்படவுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in