

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டிச.6-ல் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி இந்து முன்னணி மாவட்டச் செயலர் எஸ்.சங்கர்கணேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. போலீஸார் தாக்கல் செய்த பதில் மனு:
சங்கர்கணேஷ் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ள நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளா கும். மேலும் அன்று பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா, இந் தியன் நேஷனல் லீக் ஆகிய அமைப்புகளுக்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள் ளது. அதே நாளில் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனு மதி வழங்கினால் முஸ்லிம், இந்துக் கள் நல்லுறவு பாதிக்கப்படும். எனக் கூறப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: டிச. 6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது. போராட் டத்துக்கு அனுமதி கேட்டு மனுதாரர் அளித்த மனுவை இன்றைக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் 2016 முதல் டிச. 6-ம் தேதி போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கக்கூடாது. இது தொடர்பாக ஒரு மாதத்தில் அனைத்து போலீஸாருக்கும் உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.