

சென்னை வட்டத்திலுள்ள ஸ்டேட் வங்கிகள் சார்பில் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை ரூ.2.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்தார்.
ஸ்டேட் வங்கி சென்னை வட்டம் சார்பில் சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நுங்கம்பாக்கம், ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரஜ்னிஷ் குமார் கலந்து கொண்டு சுமார் ரூ.35 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
சமீபத்தில் பெய்த கன மழையால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதற்காக சென்னை வட்ட ஸ்டேட் வங்கி சார் பில் முதலமைச்சர் நிவாரண நிதிக் காக ரூ.1 கோடி வழங்கப்பட்டது. மேலும் வெள்ள சேதம் ஏற்பட்ட நாட்களில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் செயல்படாத நிலை உருவானது. அப்போது வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடமாடும் ஏடிஎம் மையங்கள் ஸ்டேட் வங்கி சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டது.
சென்னை வட்ட ஸ்டேட் வங்கி தனது சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை ரூ.2.07 கோடி செலவழித்துள்ளது என்றார்.
அடையாறில் உள்ள விஹெச்எஸ் மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம், உடல் உறுப்புகளை தானமாக பெறுவதில் பங்காற்றி வரும் மோகன் அறக்கட்டளை என் கிற சேவை அமைப்புக்கு ரூ.17.38 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும், சென்னை மற்றும் அதன் அருகி லுள்ள பகுதிகளில் சமீபத்தில் ஏற் பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட், எழுதுபொருட்கள் மற்றும் கல்வி பயிலும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டேட் வங்கி தலைமை பொதுமேலாளர் ரமேஷ்பாபு, பொதுமேலாளர்கள் ரவீந்திரநாத், இந்து சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.