‘மின் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வேண்டும்’

‘மின் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வேண்டும்’
Updated on
1 min read

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில் மின் பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே மின் தடைக்குக் காரணம் என்று தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும், 10 நாட்களுக்குள் அனைத்து மின் பராமரிப்புப் பணிகளையும் முடித்து, மின் தடை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 19-ம் தேதி முதல் மின் பராமரிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்துக்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்றுடன் (ஜூன் 29) முடிவடைகின்றன.

இன்றைக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து, அது தொடர்பான புகைப்படம், வீடியோ பதிவு ஆகியவற்றை தலைமைப் பொறியாளர்கள் அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன், பராமரிப்பு தொடர்பான அறிக்கையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என்று அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in