

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
லெபனான் நாட்டில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்று வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் சென்றனர். அந்த நாட்டு அதிகாரிகள் நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தபோது, 9 பேரும் ஒப்புதல் பெறப்படாத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் 9 தொழிலாளர்களும் தங்களின் பணிக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தொழிலாளர்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். நிறுவனம் செய்த தவறுக்கு, தொழிலாளர்களை தண்டிப்பது முறையல்ல. எனவே, 9 தமிழர்களையும் உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.