

திருவண்ணாமலையில் முன் னோர்கள் ஏற்படுத்தியுள்ள 365 குளங்களை மீட்டெடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவிடம் பொது நல அமைப்புகள் வலி யுறுத்தியுள்ளன.
தி.மலை மாவட்ட தலைநகர் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார்.
திருவண்ணாமலை நகர வளர்ச்சி குறித்து பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் பேசும் போது, “திருவண்ணாமலையில் மூடப்பட்டுள்ள டான்காப் தொழிற்சாலையில் பயோ டீசல் தயாரிப்பு அல்லது பாமாயில் சுத்திகரிப்பு தொழிற்சாலையாக செயல் படுத்தலாம். காய்கறிகளை பதப்படுத்தி பாதுகாக்க நவீன கிடங்கு தேவை. காய்கறி, பூ மற்றும் பழங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய மார்க்கெட் அமைக்க வேண்டும். முன்னோர்கள் ஏற்படுத்திய 6 அடி அகலம், 6 அடி ஆழமுள்ள கால்வாயை மீட் டெடுக்க வேண்டும்.
தி.மலையில் கலையரங்கம்
பார்வையாளர் அமர்ந்து பார்க்கும் வகையில், பிரம்மாண்ட விளையாட்டு மைதானம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தி.மலையில் கலை யரங்கம் அமைத்து கொடுத்து, சங்க புலவர்களின் பெயரை வைக்க வேண்டும்.
தி.மலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னோர்கள் ஏற்படுத்திய 365 குளங்களை மீட்க சிறப்பு அதிகாரியை நியமித்து நட வடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலையார் கோயில் மற்றும் நகரின் பெருமைகளை உலகம் அறியும் வகையில் ‘நூல்’ வெளியிட வேண்டும்” என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “கீழடியில்தான் முதல் மதுரை நகரம் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதற்கு முன்பாக தி.மலை நகரம் இருந்துள்ளது எனவும், இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்பு அண்ணா நாடு என அழைக்கப்பட்டதாகவும், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நாடு என்பது தலைநகராக இருந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மணிமேகலை என்ற காப்பியத்தில் அண்ணா நாடு என கூறப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பை பெற்ற நகரை மேம்படுத்த பொதுநல அமைப்புகளிடம் ஆலோசனைக் கேட்கப் பட்டுள்ளது.
பழைய அரசு மருத்துவ மனையில் 100 படுக்கை வசதிகள், நகர மைய பகுதியில் தீயணைப்பு நிலையம் என பல் வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட் டுள்ளன. அவர்கள் கூறிய கருத்துக்களை செயல்படுத்த அரசு அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்புகளை ஏற்படுத்த சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். நகரின் வெளிப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
ஆன்மிகவும், திராவிடமும் இணைந்ததுதான் திருவண்ணா மலை நகரம். இந்நகரின் பெருமை களை வெளிக்கொண்டு வரும் வகையில், வல்லுநர் குழு அமைத்து புதிய நூல் வெளியிட தனிப்பட்ட முறையில் முயற்சி எடுப்பேன்” என்றார்.
இதில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.