Published : 29 Jun 2021 06:14 AM
Last Updated : 29 Jun 2021 06:14 AM

வந்தவாசி அருகே 5 மாத குழந்தையை கடத்தி மும்பையில் விற்பனை: தந்தை உட்பட 4 பேர் கைது

மீட்கப்பட்ட குழந்தை.

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே 5 மாத குழந்தையை கடத்தி மும்பைக்கு விற்ற தந்தை உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் வசிப்பவர்கள் சரத்குமார் (29), பவானி(27). இருவரும் காதலர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பவானி பணியாற்றி வந்தார். இதனால், சரத்குமா ரும் அங்கேயே சென்றுவிட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். அதில், அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந் நிலையில், தனது குழந்தையை காதலன் கடத்தி விற்றுவிட்டதாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் பவானி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையை நேற்று முன் தினம் மீட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “திருமணத்துக்கு முன்பாக குழந்தை பிறந்துள் ளதை பெற்றோருக்கு தெரியாமல்இருக்க, குழந்தையை உறவினர் களிடம் ஒப்படைத்துவிட்டு, திருமணத்துக்கு பிறகு குழந்தை மீட்டுக் கொள்ளலாம் என பவானி யிடம் சரத்குமார் தெரிவித்துள் ளார். அதனை நம்பி, குழந்தையை பவானி கொடுத்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளசரத்குமார் மறுத்து வந்துள்ளார். இதற்கிடையில், மற்றொரு பெண்ணுடன் சரத்குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பவானி, தனது குழந்தையின் நிலை குறித்து சரத்குமார் மற்றும் அவரது பெற் றோரிடம் கேட்டுள்ளார். அப்போது தான் குழந்தை விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

பவானி கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், வந்தவாசி வட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தண்டு ஏழுமலை என்பவர் மூலம் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவரை பிடித்து நடத்திய விசார ணையில், சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கும்பல் மூலமாக மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய டுத்து மும்பையைச் சேர்ந்த நபரை தொடர்பு கொண்டு எச்சரித்ததன் அடிப்படையில், குழந்தையை கொண்டு வந்து காவல்துறையினர் முன்னிலையில் தாய் பவானியிடம் ஒப்படைத்துவிட்டார்” என்றனர்.

இது குறித்து வந்தவாசி மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தை சரத்குமார், தண்டு ஏழுமலை(45), ஈரோட்டைச் சேர்ந்தநந்தினி(30), கோபிசெட்டிபாளை யத்தைச் சேர்ந்த ஜானகி(30) ஆகி யோரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான இடைத் தரகர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x