

மின்னகம் சேவை மையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின்துறை சார்ந்த தகவல்களைப் பெறவும், புகார்களை தெரிவிக்கவும் வசதியாக,சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அத்துடன், சேவை மையத்துக்கான பிரத்யேகமான 9498794987 என்றகைபேசி எண்ணையும் அறிமுகம் செய்தார்.
இந்த சேவை மையம் தொடங்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் மின்நுகர்வோரிடம் இருந்து வந்துள்ளன. இதில், மின்தடை மற்றும்அதிக மின்கட்டணம் தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. இப்புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.