Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

‘இந்திய வழி - நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’- வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதி ‘இந்து தமிழ் திசை’ வெளியிடும் நூல்: இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் வெளியீட்டு விழா

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுதி, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வரும் ‘இந்திய வழி – நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெற உள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர், தமிழகத்தை சேர்ந்தவர். இவர், வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு உள்ள சவால்களை கூர்ந்துநோக்கி, ஆராய்ந்து ‘The India Way -Strategies for an Uncertain World’எனும் நூலை எழுதியுள்ளார்.

அந்த நூலின் தமிழாக்கம் ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் வெளியீடாக ‘இந்திய வழி – நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’ எனும் பெயரில் நூலாக வெளிவருகிறது. நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.

இந்த விழாவில், ‘துக்ளக்’ ஆசிரியரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி, நூலை வெளியிட்டு, ‘உலகின் பார்வையில் இன்றைய இந்தியா’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். தமிழக அரசின் மொழிபெயர்ப்பு வல்லுநர் டாக்டர் சங்கரசரவணன் இந்நூலை பெற்றுக்கொண்டு, ‘செல்வம் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ் இயக்குநரும், நாடக ஆசிரியருமான இளங்கோ குமணன், ‘ஓர் எளிய மனிதனின் புரிதல்’ எனும் தலைப்பிலும், ‘சட்டக்கதிர்’ ஆசிரியரும், வழக்கறிஞருமான டாக்டர் விஆர்எஸ் சம்பத், நூலை மதிப்புரை செய்தும், சங்கர் ஐஏஎஸ்அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி, ‘இன்றைய மாணவன் நாளைய தலைவன்’ எனும்தலைப்பிலும் கருத்துரை வழங்கஉள்ளனர். முன்னதாக, ‘தி இந்து’குழுமத்தின் ‘இந்து தமிழ் திசை’ - கேஎஸ்எல் மீடியா நிறுவனத்தின் தலைவர் விஜயா அருண் வரவேற்புரை ஆற்றுகிறார். நிறைவாக ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் நன்றி கூறுகிறார்.

நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இணைய விரும்புவோர் http://bit.ly/bookrelease2021 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம். அல்லது http://www.facebook.com/hindutamilevents என்ற முகநூல் லிங்க், youtube.com/tamilthehindu மற்றும் www.hindutamil.in ஆகிய யூ-டியூப் லிங்க்கில் இணைந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x