

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ்.இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.