கரோனா காலத்தில் சிறப்பான பணி மயான பணியாளர்கள், அமரர் ஊர்தி ஓட்டுநர்களுக்கு மா.கம்யூனிஸ்ட் பாராட்டு

கரோனா காலத்தில் சிறப்பான பணி மயான பணியாளர்கள், அமரர் ஊர்தி ஓட்டுநர்களுக்கு மா.கம்யூனிஸ்ட் பாராட்டு
Updated on
1 min read

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும், மயானப் பணியாளர்கள், அமரர் ஊர்தி ஓட்டுநர்களின் பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சிஐடியு அமைப்பினர் பாராட்டு தெரிவித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

கரோனா தொற்று பரவல் தற்போது உள்ள சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்கள் அனைவரும், தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை சுமந்து, அடக்கம் செய்யும் பணியில் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள், மயான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கண்ட பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து, நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு அமைப்பின் சார்பில் நடந்தது.

முதற்கட்டமாக, கோவை மாநகரத்தில் உள்ள 16 மின்மயானங்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள 38 அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் என 119 ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும், அரிசி, மளிகை உள்ளிட்ட ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in