

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் தஞ்சையில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கன மழையின் காரணமாக டெல்டா மாவட்டங் களில் விவசாயம் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றனர். நெற்கதிர் வருகிற பருவத்தில் மழை பெய்ததால் நெற்கதிரெல்லாம் பதராக மாறி யுள்ளன. எனவே, அதிமுக அரசு இதையும் பாதிப்பாக கணக்கில் கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு அதிமுக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானது அல்ல. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும். நிவாரண நிதி வழங்குவதில் உள்ள முறைகேடுகளை கண்டித்து தேமுதிக சார்பில் எனது தலை மையில் தஞ்சையில் வரும் 28-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரத்த தான முகாம்
விஜயகாந்த் வெளியிட்ட மற் றொரு அறிக்கையில், ‘‘வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. பல மாவட்டங்களில் ரத்தத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பில் வரும் 27-ம் தேதியன்று “ரத்ததான முகாம்” நடத்த வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.