

பாஜகவைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், அக்கட்சி யின் தமிழகப் பொறுப்பாளருமான பி.முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இதுவரை அறிவிக்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைக் கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். முதல்வர் வேட்பாளர் குறித்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் திறந்த மனதுடன் பேச தயாராக இருக்கிறோம்.
பாஜகவைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் கூட்டணி அமைப்பதில் திமுக மிகவும் குழப் பத்தில் உள்ளது. தேசிய ஜனநாய கக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. வரும் பொங்கல் பண்டி கைக்குப் பிறகு பாஜக கூட்டணி யில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது இறுதி செய்யப்படும். ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார். அப்போது கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும்.
மழை வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்தது. மழை, வெள்ள சேதத்தால் தமிழக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசு மீது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்களின் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முரளிதரராவ் கூறினார்.