

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பிறந்த தினமான ஜூன் 26-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரது 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தி.நகரில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு நேற்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, நா.எழிலன் மற்றும் ம.பொ.சி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.