

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தாழ்வாகச் சென்ற மின்கம்பிகளை மின்வாரியத்தினர் சரிசெய்யாத தால் மின்கம்பிகளுக்கு கிராம மக்களே கம்பால் முட்டு கொடுத் துள்ளனர்.
திருப்பாச்சேத்தி, கானூர், வேம்பத்தூர், பெரியக்கோட்டை, கல்லூரணி, அழகாபுரி, கண்ணாரிருப்பு, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக மின்கம்பங்கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளன. மேலும் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் மின்வாரியத் துறையினரிடம் பல முறை புகார் கொடுத்தும் நட வடிக்கை இல்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கண்ணாரிருப்பு விலக்கு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொங்கிய மின்கம்பியால் விபத்து ஏற்படாமல் இருக்க, மரத்தால் முட்டு கொடுத்துள்ளனர்.
மேலும் காற்று வீசும்போது முட்டு கொடுத்த மரமும் ஆடுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மின் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அப்பகுதியில் தொங்கிய நிலையில் உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.