Published : 01 Dec 2015 06:21 PM
Last Updated : 01 Dec 2015 06:21 PM
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், விழுப்புரம் - தாம்பரம் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கீழ்க்கண்ட 12 ரயில்கள் ரத்து இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 12 ரயில்கள் விவரம்:
12605 - சென்னை எழும்பூர்- குமரி பல்லவன் எக்ஸ்பிரஸ் - 15.45 (புறப்பாடு நேரம்)
16105 - சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் - 16.05
16713 - சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் - 17.00
16115 - சென்னை எழும்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் - 18.10
12693 - சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் - 19.15
12661 - சென்னை எழும்பூர் - செங்கோட்டை - பொதிகை எக்ஸ்பிரஸ் - 20.55
16101 - சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் - 21.40
16179 - சென்னை எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் - 22.00
16177 - சென்னை எழும்பூர் - திருச்சி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் - 22.30
11063 - சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் 23.00
16175 - சென்னை எழும்பூர் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் 23.15
16183 - சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் 23.30
நாளை (டிச.2 - புதன்கிழமை) 11 ரயில்கள் ரத்து
இதனிடையே, கனமழை காரணமாக பல்லவன், சோழன், வைகை உள்ளிட்ட 5 ரயில்கள் நாளை (டிச.2 - புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கனமழை காரணமாக தாம்பரம்-விழுப்புரம் இடையே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் 5 ரயில்கள் நாளை (2-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. அதன் விவரம்:
புதுச்சேரி - எழும்பூர் விரைவு ரயில்
காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன்
மதுரை - சென்னை எழும்பூர் வைகை,
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன்
சென்னை எழும்பூர் - புதுச்சேரி பாஸ்ட் பாசஞ்ஜர்
இதேபோல், புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் நாளை பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். மேலும், சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் நாளை காலை 7.40 மணிக்குப் பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (புதன்கிழமை) புறப்பட வேண்டிய விஜயவாடா ஜன் சதாப்தி, நியூ ஜல்பைகுரி, அகமதாபாத் நவஜீவன், ஹவுரா கோரமண்டல், அந்தமான், புதுச்சேரி-புதுடெல்லி ஆகிய 6 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் இன்று காலை 7.40 மணிக்கு பதிலாக 11 மணிக்கு புறப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!