

சென்னை மயிலாப்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 10 ஆயிரம் பேருக்கு வேகவைத்த முட்டை களை பாஜகவினர் வழங்கினர்.
மயிலாப்பூர் மந்தைவெளி பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்னை தெரசா நகர், கணேசபுரம், லாலா தோட்டம், கோவிந்தசாமி நகர், கே.வி.கார்டன், எஸ்.எம்.நகர், அன்பு காலனி, நொச்சி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜக, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சேவாபாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். டிசம்பர் 1-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்த நிவாரணப் பணிகள் நடைபெற்றன.
இது குறித்து வானதி சீனிவாசன் கூறும்போது:‘‘மயிலாப்பூர் பகுதியில் 10 நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ண மடம், சேவாபாரதியுடன் இணைந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள உணவு, பாய், போர்வை மற்றும்உடைகளை வழங்கியுள்ளோம். 3 நாட்களுக்கு 10 ஆயிரம் வேகவைத்த முட்டை களை மக்களுக்கு விநியோகிக்கப் பட்டன. நாரதகான சபா, சிருங்கேரி மடம் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் மக்கள், தன்னார்வ அமைப்பு களுடன் இணைந்து உணவு சமைத்து விநியோகித்தோம்” என்றார்.