Published : 26 Jun 2021 03:11 am

Updated : 26 Jun 2021 05:26 am

 

Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 05:26 AM

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி - ‘சிறு, குறு தொழிலை மீட்டெடுப்போம்’ : ஆன்லைனில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது

small-business-online-workshop

சென்னை

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் பல்வேறு சிறு மற்றும்குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. அதிலிருந்து தொழில்களை மீட்டெடுக்கும் வகையிலும்,‘சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் (MSME) தினம்’ ஜூன் 27-ம் தேதி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டும், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுப்போம்’ என்றஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக அரசின் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் செயலாளர் வி.அருண் ராய், ஐஏஎஸ்., ஜி.கே.எம் குளோபல் சர்வீசஸ் பி.லிட். நிறுவனர், பட்டய கணக்காளர் சிஏ ஜி.கார்த்திகேயன், கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, சென்னை கிஸ்ஃப்ளோ தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள்ளனர்.


இந்த நிகழ்வை நேட்டிவ்லீட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி சிவராஜா ராமநாதன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3zJzbWS என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.


வழிகாட்டி நிகழ்ச்சிஇந்து தமிழ் திசைசிறு குறு தொழிலை மீட்டெடுப்போம்கரோனா ஊரடங்குசிறு மற்றும் குறு தொழில்கள்MSMEசிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x