

தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவராக எச். வசந்தகுமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் நியமிக் கப்பட்ட எம்.எஸ்.திரவியம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். எனவே, வர்த்தக காங்கிரஸ் தலைவராக எச்.வசந்தகுமார் செயல்படுவார்’’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் வசந்தகுமார், கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு காங் கிரஸ் மாநில துணைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் 23-ம் தேதி வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவி யிலிருந்து வசந்தகுமார் திடீ ரென நீக்கப்பட்டார். ஒருவ ருக்கு ஒரு பதவி என்ற அடிப் படையில் இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளதாக இளங்கோவன் தெரிவித்திருந் தார்.
தமிழக காங்கிரஸ் தலை வர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் நேரில் முறையிட்டனர். இந்தக் குழுவில் எச். வசந்தகுமாரும் இடம் பெற்றதால் அவர் வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வசந்தகுமார், ‘‘டெல்லியில் உள்ள கட்சியின் மேலிடம் தான் வர்த்தக காங் கிரஸ் தலைவராக நியமித்தது. அந்தப் பதவியில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல் பட்டு வருகிறேன். தமிழக காங்கிரஸ் தலைவருக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை. இது குறித்து மேலிடத் தலைவர்களிடம் புகார் தெரிவித்துள்ளேன்’’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், வர்த்தக காங் கிரஸ் தலைவராக வசந்த குமார் மீண்டும் நிய மிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடம் அறி வுறுத்தியதால் இளங்கோவன் இந்த நடவடிக்கையை எடுத் திருப்பாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய வசந்தகுமார், ‘‘மீண்டும் வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது காங்கிரஸ் மேலிடம் வைத்துள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது’’ என்றார்.