

நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில், சைரன் ஒலி எழுப்பியவாறு சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஆட்சியர் பாஸ்கரன் மடக்கிப் பிடித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த அய்யம் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீமுகாம்பிகை அம்மன் கோயிலில், புதன்கிழமை திருவிழா நடைபெற்றது.
இதனால், அய்யம் பேட்டை - வாலாஜாபாத் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதன்கிழமை காலை 10:45 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், செங்கல்பட்டு நோக்கி வாகனத்தில் சென்றார். அப்போது, பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் 108 ஆம்புலன்ஸ், சைரன் ஒலி எழுப்பியவாறு ஆட்சியர் வாகனத்தின் அருகே, போக்குவரத்து நெரிசலை கடந்து செல்ல முயன்றது.
ஆம்புலன்ஸின் பின்னால் பார்த்த ஆட்சி யருக்கு, சந்தேகம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸை சோதனை செய் தார். இதில், ஆம்புலன்ஸின் உள்ளே நோயாளிகள் யாரும் இல்லாதது தெரிந்தது. இதனை தொடர்ந்து, ஆம்புலன்ஸின் ஓட்டு நரை கைது செய்யுமாறு, வாலாஜா பாத் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்துவந்த போலீஸார், ஆம்புலன்ஸ் ஓட்டு நரை கைது செய்தனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் போலீஸார் கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் பெயர் சண்முகம்(42). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எடையார்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அவர் மீது, அதிவேக மாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் யாரும் இல்லாமல், சைரன் ஒலி எழுப்பிய வாறு அவர் எங்கு செல்வதற்காக, வாகனத்தை ஓட்டிச் சென்றார் என்றும் அவரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.