ஆர்வமாக வந்த சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்ட முதல்வர்

ஆர்வமாக வந்த சிறுவனுக்கு ஆட்டோகிராப் போடும் முதல்வர் ரங்கசாமி.கீழ்படம்: முதல்வர் போட்ட ஆட்டோகிராப்.
ஆர்வமாக வந்த சிறுவனுக்கு ஆட்டோகிராப் போடும் முதல்வர் ரங்கசாமி.கீழ்படம்: முதல்வர் போட்ட ஆட்டோகிராப்.
Updated on
1 min read

புதுவை முதல்வர் ரங்கசாமியின் சகோதரி, உடல்நல பாதிப்பால் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார். விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பேராவூரில் அவரின் இறுதிச்சடங்கு நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

இந்நிலையில் மீண்டும் அதே ஊருக்கு முதல்வர் ரங்கசாமி சென்று, தனது சகோதரியின் 16 வது நாள் காரியத்தில் நேற்று முன்தினம் பங்கேற்றார். அவர் புறப்பட தயாரான போது ஒரு சிறுவன் ஓடி வந்தான். இதைக்கண்ட முதல்வர் காரில் இருந்து இறங்கி, “என்ன வேண்டும்?” என்று கேட்க, ஒரு நோட்டை நீட்டி, “ஆட்டோகிராப் வேண்டும்” என அந்தச் சிறுவன் கூறினான்.

உடனே முதல்வர் ரங்கசாமிநோட்டை வாங்கி, "நல்வாழ்த்துக்கள்; படி.. படி.. படி.. முன்னேறலாம்; ந.ரங்கசாமி" என கையெழுத்திட்டு கொடுத்தார். அதனை ஆர்வமாக வாங்கிச் சென்ற அச்சிறுவன், தனது சக நண்பர்களிடம், முதல்வர் கையெழுத்தை காட்டி மகிழ்ந்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in