சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் முதல்வர் படம் இல்லாததற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு: கண்டுகொள்ளாமல் சென்ற அதிகாரிகள்

சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் முதல்வர் படம் இல்லாததற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு: கண்டுகொள்ளாமல் சென்ற அதிகாரிகள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், சாக் கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் படம் இல்லாததற்கு திமுக கவுன் சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், புகாரை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

சாக்கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவர் சரண்யா (அதிமுக) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கார்த்தி, மாவட்டக் கவுன்சிலர் ராதா பாலசுப்ரமணியன், வட் டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதீப், ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர் பொறுப் பேற்ற மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச் சராக பொறுப்பேற்ற கே.ஆர்.பெரியகருப்பன், காரைக்குடி எம்எல்ஏ ஆன மாங்குடி ஆகி யோருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம் பேசியதாவது:

சங்கராபுரம் ஊராட்சி நவர த்தினா நகரில் சமீபத்தில் ரூ.35 லட்சத்தில் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

ஆனால், தற்போது அங்கு சாலையே இல்லை. இது போன்ற சாலைகளை அமைக்கும் ஒப்பந் ததாரர்களுக்கு தொடர்ந்து ஒப்பந்தம் வழங்குவதை ஏற்க முடியாது.

புளியங்குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் இல்லாததற்கு திமுக கவுன் சிலர்கள் சொக்கலிங்கம், ரேவதி சின்னத்துரை ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in