

பெரம்பலூர் மாவட்டம் குரும் பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(29). இவர், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டு வதற்காக நேற்று அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டினார்.
இதில், 6 அடி ஆழத்துக்கு குழி தோண்டியபோது, கற்களால் ஆன சுவாமி சிலைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பக்கவாட்டில் சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, மண்ணில் புதைந்திருந்த தலா ஓரடி உயரமுள்ள 6 சுவாமி கற்சிலைகள் வெளியே எடுக்கப் பட்டன.
தகவலறிந்த வருவாய்த் துறை அலுவலர்கள் அங்கு சென்று, சிலைகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், இதுகுறித்து தொல்லியல் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆய்வுக்குப் பிறகே, இவை என்ன சுவாமி சிலைகள், எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பன போன்ற விவரங்கள் தெரியவரும் என்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.