

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர் களின் சுகாதாரத்தை பாதுகாக்க எடுக்க வேண்டியது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப் பன் அனுப்பியுள்ள ஒரு சுற்ற றிக்கையில் கூறியிருப்ப தாவது:
* பள்ளி மாணவர்கள் அனை வரும் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்
* பள்ளிகளுக்கு முன்பாக விற்கப்படும் சுகாதாரமற்ற எந்த ஒரு உணவு பொருளையும் வாங்கி உண்ணக்கூடாது என்று அறி வுரை சொல்ல வேண்டும்.
* பள்ளிக்கு அருகில் தள்ளு வண்டி போன்ற சிறு கடைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அப் புறப்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, நீர் தேக்க தொட்டி களில் ஊராட்சி, நகராட்சி, மாநக ராட்சி சுகாதார அலுவலர்கள் மூலம் குளோரின் கலந்து, நீரை சுத்தம் செய்ய வேண்டும்.
* பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் அனைத்து கழி வறைகளிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.