Published : 25 Jun 2021 08:52 AM
Last Updated : 25 Jun 2021 08:52 AM

கரோனா விதிமீறல்; திருமண மண்டப உரிமையாளர், ஏற்பாட்டாளருக்கு ரூ.30,000 அபராதம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

எழும்பூரில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத திருமண மண்டப உரிமையாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு மொத்தமாக ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூன் 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது, மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 6 திருமண மண்டபங்களுக்கு ரூபாய் 11,000 அபராதம் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 24 அன்று ராயபுரம் மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் எழும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், 50-க்கும் மேற்பட்ட நபர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். தனிமனித இடைவெளியை பின்பற்றாத மற்றும் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு ரூபாய் 30,000 அபராதமாக விதிக்கப்பட்டது".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x