வாகனச் சோதனையின்போது மக்களை தாக்கினால் நடவடிக்கை: போலீஸாருக்கு டிஜிபி எச்சரிக்கை

வாகனச் சோதனையின்போது மக்களை தாக்கினால் நடவடிக்கை: போலீஸாருக்கு டிஜிபி எச்சரிக்கை
Updated on
1 min read

வாகனச் சோதனையின்போது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரித்துள்ளார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாலைகளில் தடுப்பு கள் அமைத்து போலீஸார் கண் காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து முக்கிய சாலைகளில் மட்டும் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இதற்கிடையே சமீபத்தில் வாகன சோதனையின்போது, மதுஅருந்தியிருந்த ஒருவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதில் அவர்உயிரிழந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீஸார்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in