மின்தடை சார்ந்த குறைகளுக்கு அழைக்கலாம்: சோழிங்கநல்லூர் எம்எல்ஏ செல்போன் எண் வெளியீடு

மின்தடை சார்ந்த குறைகளுக்கு அழைக்கலாம்: சோழிங்கநல்லூர் எம்எல்ஏ செல்போன் எண் வெளியீடு
Updated on
1 min read

மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகள் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் தெரிவிக்குமாறு சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக மின்வாரியம் சார்பில் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. இது இல்லாமல், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் தொலைபேசியில் புகார் அளிக்கலாம். தற்போது, ‘1912’ மற்றும் 9498794987 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் பழுதடைந்து, சாய்ந்து இருந்தாலோ, மின் கம்பிகள் மீது மரங்கள் மரக்கிளைகள் சாய்ந்திருந்தாலோ மின்னழுத்தம் மற்றும் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருந்தாலோ உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பலாம். மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாகவும், தொலைபேசியிலும், அருகில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

மேலும் எனது 98400 61354 என்ற தொலைபேசியிலும் புகார் அளிக்கலாம். மின் விளக்குகள் எரியவில்லை என்றாலும்,புதிய மின் விளக்குகள் தேவை இருந்தாலும் அதன் விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தொகுதியில் மின் துண்டிப்பு இல்லாத நிலையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in