மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11 நகரும் பண்ணை பசுமை கடைகள் திறக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11 நகரும் பண்ணை பசுமை கடைகள் திறக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் காய்கறிகளை விற்பனை செய்ய 11 நகரும் பண்ணை பசுமை கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கனமழையால் சென்னைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன. இதனால் காய்கறிகளின் விற்பனையை சீர்படுத்தும் வகையில், நுகர்வோருக்கு உரிய நேரத்தில் தரமான காய்கறிகள், நியாயமான விலையில், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் கிடைக்கும் விதமாக, 11 நகரும் பண்ணை பசுமை கடைகள் திறக்கப்பட உள்ளன. அவை கீழ்கண்ட இடங்களில் காய்கறிகளை விற்பனை செய்ய உள்ளன.

காரணீஸ்வரர் கோவில் தெரு (சைதாப்பேட்டை), ஜி.என்.செட்டி தெரு (தியாகராய நகர்), காம்தார் நகர் (நுங்கம்பாக்கம்), ராகவேந்திரா கல்யாண மண்டபம் (கோடம்பாக்கம்), நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், ரட்லேண்ட்கேட், எல்லையம்மன் கோவில் தெரு (தேனாம்பேட்டை),

மயிலாப்பூர் குளம், பெசன்ட்நகர், சிந்தாதிரிப்பேட்டை, நேஷனல் பப்ளிக் ஸ்கூல் (கோபாலபுரம்), இராயப்பேட்டை, சாந்தி காலனி (அண்ணாநகர்), போக்குவரத்து அலுவலகம் அருகில் (அண்ணாநகர்), வசந்தம் காலனி (அண்ணாநகர்), எம்.எம்.டி.ஏ. காலனி (அரும்பாக்கம்),

சேணியம்மன் கோயில் தெரு (தண்டையார்பேட்டை), திருவொற்றியூர் பஸ் நிலையம், பார்த்தசாரதி பாலம் (தங்கசாலை), மண்ணப்பன் தெரு (பழைய வண்ணாரப்பேட்டை), சிங்கந்தர்பாளையம் (கொருக்குப்பேட்டை), வியாசர்பாடி, முத்தமிழ் நகர் (வண்ணாரப்பேட்டை),

காசிமேடு, குறுக்கு தெரு (புது வண்ணாரப்பேட்டை), வீரராகவன் தெரு (புது வண்ணாரப்பேட்டை), பாலவாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லூர், மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in