Published : 12 Dec 2015 09:40 AM
Last Updated : 12 Dec 2015 09:40 AM

வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் பற்றிய உண்மை விவரங்களை வெளியிட வலியுறுத்தல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை:

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னறிவிப்பின்றி சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால்தான், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதுகுறித்து முழுமையான விசா ரணை நடத்துவதற்கு பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி யைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.

மழை வெள்ளத்துக்கு கடலூர் மாவட்டத்தில் மட்டும் 100 பேர் பலியாகி உள்ளனர். ஆனால், தமிழகம் முழுவதும் 347 பேர் மட் டுமே உயிரிழந்துள்ளதாக பொய் யாக கூறப்படுகிறது. எனவே, உயிரி ழந்தவர்கள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை அரசு அறிவிக்க வேண்டும். பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சென்னையில் வெள்ளம் ஏற் பட்டபோது, நந்தம்பாக்கம் டி.எல்.எப் வளாகத்தின் மூன்றாம் தளம் வரை தண்ணீர் புகுந்ததாகவும், அப்போது, உள்ளே 600-க்கும் அதிகமான ஊழியர்கள் இருந்த தாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஊழியர்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டுவிட்டனர், யாரும் மரணம் அடையவில்லை என்று டி.எல்.எப். நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த ஊழியர்களின் உடல்களை அவசர அவசரமாக டி.எல்.எப். நிறுவனம் அகற்றியதாக செய்திகள் வருகின்றன. உண்மை நிலவரத்தை அறியச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x