

சென்னை தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்த 14 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னையில் பெய்த கனமழையால் கிண்டியை அடுத்த மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜெனரேட்டர் மூலம் மியாட் மருத்துவமனைக்கு மின்சா ரம் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அடையாறில் பெருக் கெடுத்த வெள்ளம் மருத்துவமனை யின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால் அங்கிருந்த மின்சாதனங்கள் அனைத்தும் பழுதடைந்தன.
தரைத்தளத்தில் இருந்த ஜென ரேட்டரும் வெள்ளத்தில் மூழ்கிய தால் மருத்துவமனை இருளில் மூழ்கியது. இதையடுத்து மருத்துவ மனை நிர்வாகமும், அரசும் மாற்று ஏற்பாடுகளை செய்தும் அது பலனளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் மூச்சித் திண றல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளால் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்களை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். மீதமிருந்த 14 பேரின் உடல்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் வேறு தனியார் மருத்துவமனை களுக்கு மாற்றப்பட்டனர். ராயப் பேட்டை மருத்துவமனையில் வைக் கப்பட்ட 14 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. இதற்கிடையில் 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.