

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடலை பாடிய நடிகர் சிம்பு விசாரணைக்காக வரும் 19-ம் தேதி கோவை காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ஆபாசமாக பாடல் இயற்றியதாக மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை தியாகராஜா நகரில் உள்ள சிம்பு வீட்டிற்கு விசாரணைக்காக வந்த பொலீசார், அவர் அங்கு இல்லாததால்,விசாரணைக்கு அவரை ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில், சிம்பு, அனிருத் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டப் பிரிவு (4), பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (509), தகவல் தொழில்நுட்பச் சட்டம்(67) ஆகியவற்றின் கீழ் கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் சென்னை தி.நகர் இல்லத்துக்கு வந்த கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸார் சிம்பு அங்கு இல்லாததால் அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் காவல் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கினர்.